dalitiyam

dimanche 23 août 2009

கற்சுறா

கற்சுறா  

1983இல் கட்டவிழ்த்து விட்ட அன்றைய சிறீலங்கா அரசின் வன்முறை ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்களைப் பலியெடுத்தது. போர் என்றால் போர் சமாதானம் என்றாலும் போர். என்ற இனவாதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் வாக்குமூலம் தமிழர்கள் என்பதை முற்றாக நிராகரித்தது. ஒரு அரச இராணுவம் என்னவகையில் தனது மக்கள் மீது வன்முறையைப் பிரையோகிக் முடியுமோ அதற்கும் மேலால் இனவாதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரச இராணுவம் செய்து காட்டியது.



கொம்பு சீவப்பட்ட சிங்களக் காடையர்கள் அரச இராணுவத்திற்கு ஒத்தாசை வழங்கினார்கள். 1983 இலங்கையே கொழுந்து விட்டு எரிவது போல் இருந்தது. வெலிக்கடையில் கொல்லப்பட்ட 53 பேர்களிண் பெயரும் இலங்கை தமிழ் வானொலிச் செய்தியில் வாசிக்கப்பட்டபொழுது முழு இலங்கையும் இருள்
கவ்வியது.  நாம் ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட வன்முறையாளர்களோ வன்முறை மீது கொண்ட மனநோயாளிகளோ அல்ல என்று நீதி மன்றத்தில் கூக்குரலிட்ட தங்கத்துரை, எனக்கு மரணதண்டனை தரும் போது எனது கண்ணை யாருக்காவது தானமாகக் கொடுங்கள் அப்போது எனது கண் தமிழீழத்தைப் பார்க்கும் என்று சொன்ன குட்டிமணி தேவன் ஜெகன் என்று 53 பெயர்கள் நமக்குப் பாடமாகின. இந்தப் படுகொலை நடந்து 25 வருடங்கள் ஆகிவிட்டும் நமக்கு அந்தப் பெயர்கள் இன்றுவரை மனதில் இருக்கின்றது. அந்தப் படுகோர நிகழ்வினை கோரம் கொண்டு எதிர்க்க முடிகிறது. 25 வருடங்கள் காவிக் கொண்டுவர முடிகிறது. இந்தச் சாத்தியங்களை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பது முக்கியம்.

0 commentaires:

Enregistrer un commentaire

Abonnement Publier les commentaires [Atom]



<< Accueil