பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாட்டைத்தொடர்ந்து,இரண்டாவது தலித் மாநாடு லண்டனிலும் சிறப்புடனும், பல விவாதங்களுடனும் நடந்து முடிந்தது. கடந்த 16ஆம்17ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள LEYTONSTON எனும் சுரங்கப்பாதை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள QUACKERS HOUSE எனும் மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது.
ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட புதியஜனநாயக் கட்சி உறுப்பினரான தோழர் ந.ரவீந்திரனும் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட அ.மார்க்ஸ் அவர்களும் நேரடியாகக் கலந்து கொள்ளமுடியாது போனது. இருப்பினும் தோழர் ரவீந்திரனும், அ. மார்க்சும் காத்திரமான கட்டுரைகளை மாநாட்டுக்கு அனுப்பிவைத்தனர். குறிப்பாக அ.மார்க்ஸ் அவர்கள் கட்டுரையாகவும் ஒலி வடிவத்திலும் தனது கட்டுரையை அனுப்பிவைத்தார்.
முதல் நாள் கலந்து கொண்டவர்களின் சுய அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரான்சில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட தோழர் பரா மாஸ்டர் அவர்கள் இரண்டாவது மாநாடு நடைபெறும்போது எம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரை நினைவுகொண்டும் கடந்த காலத்தில் தலித் சமூக விடுதலைப்போராட்டத்தில் களப்பலியானவர்களையும் மனதில் இருத்தி சில நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இலங்கைத் தலித் சமூக விடுதலை முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பிற்பாடு அவரின் தலைமையிலேயே தோழர் ந.ரவீந்திரனின் கட்டுரையை ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.பௌசர் அவர்கள் வாசித்தார். அதைத்தொடர்ந்து புஸ்பராணி அவர்கள் சாதியமும் பெண்களும் எனும் தலைப்பில் பேசினார்.
தோழர் ரவிந்திரன் அவர்கள் இலங்கையில் சாதியம் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதை பல ஆதாரங்களுடன் தனது கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தார். யுத்த சூழலில் மறைந்து உறைந்து நீறுபூத்துக்


